Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பொங்கலோ பொங்கல்

January 14, 2014

பொங்கல் லீவில் இந்த வேலையை முடிக்கலாம் அந்த வேலையை முடிக்கலாம் என்று மனதுக்குள் பட்டியல் போட்டு படுத்தேன்.

ஆனால் காலை எழுந்து கண் விழித்தது என்னவோ தொலைக்காட்சி பெட்டி முன்புதான். பட்டி மன்றங்கள், வெட்டி மன்றங்கள், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்கள் முதல் திரைக்கே வராத படங்கள் வரை சேனல் மாற்றி மாற்றி பார்த்ததில் கண் வலித்ததுதான் மிச்சம். லிஸ்டில் ஒரு வேலை கூட ஆகவில்லை.

சில ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை சீனியர் நட்சத்திரங்களுக்கும் சில்லறை நட்சத்திரங்களுக்கும் செலவு செய்து விளம்பரங்களின் மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டிய சேனல்களின் ஒரே முதலீடு நம்மை போன்ற பொழுது போக்கிகள்தான்.

உருப்படியாக நடந்த ஒரே விஷயம் எல்லா நண்பர்களுக்கும் ஒரே வாழ்த்தை forward செய்து, வாழ்த்து அனுப்பிய எல்லோருக்கும் ஒரே நன்றியை reply செய்ததுதான்.

நாளையாவது என் லிஸ்டை கவனிக்கிறேன்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.