”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடிய உடனே அந்த நிலத்தினை வீட்டு மனைகளாக்கி, அதற்கு வள்ளலார் நகர் என்று பெயரும் வைக்கும் ஊர் இது என்ற திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகளை மேற்கோள் காட்டி ”ரியல் எஸ்டேட்” தொடர்பான அடிப்படை சட்ட விளக்கங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்...
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” – திருமூலர் தன்னை நன்றாகத் தமிழ் செய்வதற்க்கு இறைவன் தன்னை வணங்கிய அடியவர்களுக்கு அருள் செய்திருக்கலாம். ஆனால் தமிழை நன்றாகச் செய்வதற்க்கு இறைவன் தன்னை நம்பாதவர்களுக்கும் அருள் செய்து வருகிறான். அதனால்தான் காலம்தோறும்…
“நின்னைச் சில வரங்கள் கேட்பேன்அவை நேரே இன்றெனக்குத் தருவாய்எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்என்னைப் புத்துயிராக்கிஎனக்கேதும் கவலையறச் செய்துமதிதன்னை மிகத் தெளிவு செய்துஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்”. நான் மகாகவி பாரதியிடம் எப்போதும் வியக்கும் விஷயமே அவர் வார்த்தைகளில்…
”ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லைபோகாறு அகலாக் கடை”பொருள் – வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. தேவையற்ற செலவுகளை குறைத்தாலே நிறைவாக வாழலாம்.இந்தத் திருக்குறளை நினைக்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவு வரும் அல்லது அப்பாவை நினைக்கும்போதெல்லாம் இந்தத் திருக்குறளும் நினைவுக்கு வரும்.என் தந்தை சில…
கே. பாலசந்தரின், தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து வந்த ”தண்ணீர் தண்ணீர்” திரைப்படம் வந்த ஆண்டு 1981. அதற்குப் பிறகு தமிழகம் எத்தனையோ புயல் மழை பெருவெள்ளம் என்று பார்த்துவிட்டது. ஆனால் இந்த 2019-ம் ஆண்டும் ”தவிக்கும் தமிழகம்” என்று தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கிறோம்.ஒரு…
”எண்கள் தேவையற்ற உரையாடல்கள்” – வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு இது. ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தச் சிறுகதை வண்ணதாசனின் சாகித்ய அகடமி விருது பெற்ற ”ஒரு சிறு இசை” என்ற புத்தகத்தில் உள்ளது. நல்ல புத்தகம். புத்தக கண்காட்சி நடைபெறும் சமயம். சுலபமாக…
நேற்றுதான் 2018-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்து சொன்னதுபோல இருக்கிறது. அதற்குள் 2019-ம் ஆண்டு வந்து விட்டது. கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது கடலின் அலைகள் நம் காலுக்கு அடியில் இருக்கும் மணலை அரித்துக்கொண்டு செல்வது போல் காலம் நம் கட்டளைக்கு காத்திருக்காமல் பறந்து கொண்டே இருக்கிறது. “Miles to…
அசோகமித்திரன் ”பிரயாணம்” என்ற சிறுகதையை எழுதிய ஆண்டு 1969. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழிந்த பின்னும் யாரோ ஒருவர் இந்தக் கதையைப் படித்தும் அதுகுறித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி. அவனுக்கான வாசகர்கள் சமகாலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற…
”பெருங்கடல் நீங்கள்அலைகளாய் நாங்கள்ஆர்ப்பரித்து தொடர்வோம்”இந்த வரிகளை சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். சங்கள் IAS அகடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்களைக் குறித்த நினைவுக் குறிப்புதான் அது.நன்றாக பறந்து கொண்டிருந்த பட்டம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது.நம்மில் பலர் தோல்விகளைக் கூட…
நான் வலைப்பதிவில் எழுதுவதற்கு ஒரு மாதம் இடைவெளி வந்து விட்டால் என் மனதில் அடிக்கடி வந்து போகும் நண்பர் மதுரை செந்தில்தான். அவர்தான் போன் செய்து ஏன் சார் கொஞ்ச நாளாக எதுவும் எழுதவில்லை. அடிக்கடி எழுதுங்கள் சார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் தொடா்ந்து…
மனதின் பலவீனமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது நமது செயல்கள் எப்படி நம்மை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை அடிநாதமாக கொண்டு சொல்லப்பட்ட கதைதான் சுந்தர ராமசாமியின் ”வழி” என்ற சிறுகதை.இந்தக் கதையின் நாயகன் ஒரு மலையருவியில் குளித்துவிட்டு வரும்போது பக்கத்தில்…