எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
இன்று (11/12/2013) மகாகவி பாரதியாரின் பிறந்த நாள். கட்அவுட் வைத்து கொண்டாட ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாரதி உன்னை தினமும் எங்கோ யாரோ இந்த உலகம் முழுவதும் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த யாரோ ஒருவரில் நானும் ஒருவன்.