நன்றி 2013. எல்லோருக்கும் எப்படியோ, எனக்கு சற்று அதிகமாக அன்பை காட்டிய வருடம் 2013.
நீண்ட நாள் கனவு இல்லம், கனவிலும் நினைக்காத கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை (இதைப் பற்றி விரிவாக பின்னர் பகிர்கிறேன்), இப்படி நிறைய மகிழ்ச்சித் தருணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது 2013. மீண்டும் உனக்கு நன்றி 2013.
2013 ன் நல்ல தருணங்கள் 2014 ன் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் புத்தாண்டை.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.